| மூலவர் : | ஸ்ரீ அருணாசலேஸ்வரர் |
| அம்மன் தயார் : | ஸ்ரீ உண்ணாமுலையார் |
| தல விருட்சம் : | வில்வமரமும் அரசமரமும் இணைந்துள்ளன |
| பரிகாரம் : | குழந்தை பாக்கிய ஸ்தலம் |
| ஊர் : | சென்னியமங்கலம், திப்பிரஜபுரம் அஞ்சல், கும்பகோணம். |
| மாவட்டம் : | தஞ்சாவூர் |
| மாநிலம் : | தமிழ்நாடு |
சிவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், அஷ்டமி பூஜை, சங்கடகர சதுர்த்தி, சோமவாரம், கார்த்திகை தீபம், திருவாதிரை நடராஜர் சிறப்பு வழிபாடு, அன்ன அபிசேகம், சித்ராபௌர்ணமி குத்துவிளக்கு பூஜை…
இத்தல இறைவன் சுயம்ம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்திருக்கோயிலில் இரண்டு சிவலிங்கம் மற்றும் இரண்டு அம்பாளையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். அருணாசலேஸ்வரர் இடது கையில் உடுக்கையும், சூலமும் வைதிருப்பதுபோல் காட்சி தருகிறார். இரண்டு லிங்கதிற்கும் ஒரே நந்தி காட்சியளிக்கிறார். நவகிரகங்கள் தம்பதி சமேதர்ரர்களாக மிகவும் சிறப்பாக காட்சியளிக்கின்றன.
முகப்பு: தல விருட்சம் அடியில் மங்கள விநாயகர் அருள்புரிகிறார், நந்தி பலிபீடம்
மகா மண்டபம்: ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ மீனாட்சி, சப்த மாதாக்கள், நர்த்தன விநாயகர், ஆறு விரல் கொண்ட குரு பகவான், பால கணபதி, அர்த்தநாரிஸ்வரர், வள்ளி முருகன் தெய்வானை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், காலபைரவர், நந்தி, பதினெட்டாம்படி அமர்த்த மணிகண்டன்,
பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தல விருட்சத்தை ஐந்து முறை சுற்றி வந்து அருணாசலேஸ்வரருக்கு அபிசேகம் செய்து, விரதம் இருந்து மஞ்சள் கிழங்கு பெற்று சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். இது வழக்கத்தில் கண்ட உண்மையாகவும் நடந்து வருகின்றன.
நேர்த்திக்கடன்: கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்ர் த்திக்கடன் நிறைவேற்றலாம்..